திருச்சி திருவானைக்காவல் சன்னதி வீதியில் உள்ள ஆறுநாட்டு வேளாளர் தலைமை சங்கம் சார்பில் குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. இந்த குத்து விளக்கு பூஜையை ஆறுநாட்டு வேளாளர் சங்க தலைவரும் சிவானி கல்லூரி சேர்மனுமான செல்வராஜ் தலைமை தாங்கி குத்து விளக்கு ஏற்றி வைத்து பூஜையை தொடங்கி வைத்தார். உலக மக்களின் நன்மைக்காகவும், மாணவ, மாணவிகளின் கல்வி அறிவு மேம்படவும், நோய் நொடி இல்லாமல் வாழவும், திருமணம் மற்றும் குழந்தை பாக்கியம் உண்டாகவும் சிறப்பு பூஜையுடன், குத்து விளக்கு பூஜை நடைபெறுகிறது.
இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர். பூஜையில் கலந்து கொண்ட பெண்களுக்கு திருமாங்கல்ய கயிறு, மஞ்சள் குங்குமம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில் செயலாளர் இன்ஜினியர் சதீஸ்வரன், பொருளாளர் செந்தில்குமார், துணை தலைவர் புரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியை கீதா, கவிதா, அமுதா, தர்ஷினி, வளர்மதி, சசிகலா, திலகவதி, பிரேமலதா, மகாலட்சுமி ஆகியோர் விழாவை ஒருங்கிணைத்தனர். விழாவில் பெண்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.