75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்சி அல் ஜமீ அத்துஸ் சாதிக் மெட்ரிகுலேஷன் பள்ளி உலக சாதனை படைக்கும் விதமாக பள்ளி மாணவ மாணவிகள் காகித கோப்பைகளை கொண்டு உருவாக்கப்படும் உலகின் மிகப்பெரிய தேசியக்கொடி குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.
இதுகுறித்து பள்ளியின் தாளாளர் ஜனாப் மவ்லானா மவ்லவி முகமது ஆரிஃப் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
திருச்சி காஜாமலை பகுதியில் உள்ள அல் ஜமீ அத்துஸ் சாதிக் மெட்ரிகுலேஷன் பள்ளி சார்பில் 75-வது சுதந்திர தின கொண்டாட்டமாக மாணவ மாணவிகளின் கல்வி மற்றும் தனி திறமைகளை நிரூபிக்கும் விதமாக பள்ளியின் முப்பதாம் ஆண்டு விழாவினை முன்னிட்டு பிரம்மாண்டமான ஒரு உலக சாதனை படைத்து கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதனை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளை கொண்டு காகித கோப்பைகளால் உருவாக்கப்படும் உலகின் மிகப்பெரிய தேசியக்கொடி இதுவாகும். இந்த மாபெரும் உலக சாதனை நிகழ்வினை எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் மற்றும் இந்தியா ரெக்கார்ட்ஸ் அகாடமி ஆகிய இரண்டு உலக சாதனை நிறுவனங்களின் ஆய்வாளர்கள் நேரில் வந்து கலந்து கொண்டு ஆய்வு செய்து சான்று அளிக்க உள்ளனர்.
இந்த நிகழ்வுகள் அனைத்தும் நமது பள்ளி வளாகத்தில் வருகிற மார்ச் 4,5- ஆகிய தேதிகளில் பள்ளியின் மாணவ மாணவிகளை கொண்டு காகிதக் கோப்பைகளால் உருவாக்கப்படும். உலகின் மிகப்பெரிய தேசியக்கொடி வடிவமைக்கப்பட உள்ளது என தெரிவித்தார். இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது பள்ளியின் செயலாளர் ஹாஜி. அகமதுல்லா, பள்ளி முதல்வர் கமர்த்தாஜ், ஆசிரியர்கள் ரபிக்குன்னிஸா, ஜோஸ்பின் ஸ்டெல்லா, பரண்யா ஆகியோர் உடன் இருந்தனர்.