தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் மாநில அமைப்பு சார்பில் செய்தியாளர் சந்திப்பு திருச்சியில் நடைபெற்றது.. அதில் …தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாள் அன்று அறிவித்திருந்த பள்ளி கல்வி கட்டமைப்பு, பள்ளி வளர்ச்சி, ஆசிரியர் நலன் சார்ந்த புதிய அறிவிப்புகளை வெளியிட்டு இருந்தார். ரூபாய் 225 கோடி அளவிலான நலத்திட்ட மதிப்பீடுகளை வழங்கி இருக்கிறார்,
அந்த வகையில் கல்வி வளர்ச்சியின் முன்னோடியாக செயல்படக்கூடிய முதலமைச்சருக்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் மாநில அமைப்பின் சார்பில் நன்றிகளையும், வாழ்த்துதல்களையும் தெரிவித்துக் கொண்டனர். மேலும் தமிழ்நாட்டின் கடந்த ஆட்சி காலத்தில் பேச்சு வார்த்தை கூட அழைக்காத அரசாக இருந்தது, தற்போது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகள், ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை தொடர்ந்து சந்தித்து பேசி அனைத்து கோரிக்கைகளை கேட்டு வருகிறார்.
கடந்த ஆட்சி போல் இல்லாமல் அனைத்து வாக்குறுதிகளும் படிப்படியாக நிறைவேற்றப்படும் என உறுதி அளித்துள்ளார். எனவே விரைந்து எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் எனவும் , அதேபோல் வருகின்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆசிரியர்களின் முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்றி அறிவிப்பார் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தனர்..