தமிழக முன்னாள் முதலமைச்சரும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் விழா திருச்சி மேலசிந்தாமணியில் அதிமுக.பிரமுகர் இப்ராம்ஷா ஏற்பாட்டில் நடைபெற்றது.
விழாவில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் குமார்,கழக எம்.ஜி.ஆர் இளைஞரணி இணைச் செயலாளர் சீனிவாசன் ஆகியோர் அங்கு அலங்கரிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தி ஏராளமான பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில் பகுதி செயலாளர்கள் அன்பழகன் தலைமையில் பகுதி செயலாளர் சுரேஷ்குப்தா, சிந்தாமணி கூட்டுறவு சங்க தலைவர் சகாதேவ் பாண்டியன், மற்றும் பலர்.கலந்து கொண்டனர்.