திருச்சி தூய வளனார் கல்லூரியில் உலக மகளிர் தின விழா இன்று கொண்டாடப்பட்டது. விழாவில் பெண்கள் நல அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியை முனைவர் மேகிடயானா வரவேற்புரை ஆற்றினார். அதைத்தொடர்ந்து கல்லூரியின் செயலர் முனைவர் அமல் சேசே தன்உரையில் பெண்களை வாழ்த்தி,” பெண்உரிமைமனித உரிமை” என்ற கருத்தை எடுத்துரைத்தார். கல்லூரி முதல்வர் முனைவர் ஆரோக்கிய சுவாமி சேவியர் சேசே நாட்டின் வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பை பற்றி பேசினார். இணை முதல்வர் ராஜேந்திரன் தன்உரையில் பெண்களின் முக்கியத்துவத்தை பற்றி பேசினார். பின்னர் முனைவர் கீதா சிவராமன் சிறப்புவிருந்தினரை அறிமுகப்படுத்தினார்.
அதனைத் தொடர்ந்து திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சத்தியபிரியா பேசுகையில், “வாழ்க்கையில் குறிக்கோள்களை தீர்மானித்து அவைகளை அடைவது எப்படி என்றும், தேசத்தின் தலைசிறந்த பெண்களைக் குறிப்பிட்டு மாணவிகளை உற்சாகப்படுத்தினார். பெண்கள் நல்ல முறையில் படிப்பதுவே பெற்றோர்களுக்கு செய்யும்மரியாதை என்றும், தான் காவல்துறையில் மனதிருப்தி அடைந்துள்ளதாக பெருமிதத்துடன்” கூறினார். பின்பு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி சிறப்பித்தார். இறுதியில் பேராசிரியை ஜெயஸ்ரீ நன்றியுரை ஆற்றினார்.