மாநாட்டிற்கு சங்கத்தின் அகில இந்திய தலைவர் ஸ்ரீகுமார் தலைமை தாங்கினார். சங்கத்தின் சேர்மன் அமிதாப் பௌமிக் மாநாட்டினை துவக்கி வைத்தார். வங்கியின் சென்னை மண்டல மேலாளர் பி.மகேந்தர், சங்கத்தின் செயல் தலைவர் கௌஷிக் கோஷ் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். சங்கத்தின் பொது செயலாளர் திலீப் சகா சிறப்புரை உரை நிகழ்த்தினார்.
சங்கத்தின் கோயம்புத்தூர் வட்டார தலைவர் ஸ்ரீநிவாஸ் மற்றும் சங்கத்தின் திருச்சி வட்டார தலைவர் ராம்மோகன், சங்கத்தின் அமைப்பு செயலாளர்கள் உதயகுமார், சிவகுமார், சங்கத்தின் தமிழ்நாடு மாநில உதவி பொது செயலாளர் நெல்சன், தெலுங்கானா மாநில உதவி பொது செயலாளர் வெங்கன்னா,
ஆந்திர பிரதேஷ் மாநில உதவி பொது செயலாளர் நரையா பகதாலா, கர்நாடகா மாநில உதவி பொது செயலாளர் ஸ்ரீதர் படாகி, கேரள மாநில உதவி பொது செயலாளர் செல்வக்குமார் மற்றும் தமிழ் நாடு மாநில வங்கி பணியாளர்கள் சங்க பொது செயலாளர் சங்கரவடிவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.