தமிழ்நாடு தேவேந்திரகுல வேளாளர் மத்திய மாநில அரசு ஊழியர் சங்க மாநில மகளிர் அணி நிர்வாகிகள் அறிமுக கூட்டம் மற்றும் விருது வழங்கும் விழா உள்ளிட்ட முப்பெரும் விழா திருச்சி அருண் ஓட்டலில் இன்று நடந்தது. கூட்டத்துக்கு மாநில நிர்வாக குழு உறுப்பினர் பேராசிரியர் சாந்தி வரவேற்று பேசினார்.
மாநில துணைத்தலைவர் தேவகி தலைமை தாங்கினார். தேவேந்திரர் வரலாற்று ஆய்வாளர் ரேணுகா, டாக்டர் தமிழ்மணி, சந்தன மேரி, சாஸ்திரா பல்கலைக்கழக இணை புலத் தலைவர் அல்லிராணி, பேராசிரியர் சத்யா ஆசிரியர் முருக சரஸ்வதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இதில் முன்னாள் அமைச்சரும், எம். எல். ஏவுமான தமிழரசி ரவிக்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசுகிறார்.திருச்சி மாவட்ட மகளிர் அணி ஜெயக்கொடி நன்றி கூறினார்.