திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதி அதவத்தூர் கிராமத்தில் பட்டியல் சமூக மக்களுக்கான சுடுகாடு உள்ளது. அந்த இடத்தில் தகன மேடையோ மேற்கூறையோ கிடையாது. இப்படி இருக்க கூடிய நேரத்தில் மழைக்காலத்தில் பட்டியல் சமூக மக்களின் ஒருவர் இறந்தால் அவர்கள் குறைந்தபட்சம் ஒரு இரண்டு கிலோமீட்டர் சுற்றி வந்து அடக்கம் செய்யக்கூடிய ஒரு நிலை இருப்பதால்
இந்த சுடுகாட்டு இடத்தில் தகன மேடையும் மேற்கூறையும் இறுதிச் சடங்கு செய்யக்கூடிய ஒரு கட்டிடத்தையும் கட்டிக் கொடுக்கக் கோரியும், சுடுகாட்டுக்கு செல்லக்கூடிய இடத்தில் சாலை வசதி செய்துதரக்கோரியும் இன்று மாவட்ட ஆட்சியரிடம் சமூக நீதிப் பேரவை தலைவர் ரவிக்குமார் மற்றும் ஜனநாயக சமூக நல கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சம்சுதீன் உள்பட அப்பகுதி மக்களும் சேர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.