திருச்சி மாவட்ட கையுந்துபந்து கழகம் நடத்தும் மாவட்ட அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கையுந்துபந்து போட்டி வருகிற மார்ச் 18.3.2023 மற்றும் 19.3.2023 ஆகிய இரு தேதிகளில் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி மைதானத்தில் நடைபெற உள்ளது.
மேலும் 18 ம் தேதி காலை 09.00 மணியளவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியினை தொடங்கி வைக்க உள்ளார். மேலும் இந்த மாவட்ட அளவிலான கையுந்துபந்து போட்டிக்கான ஏற்பாடுகளை திருச்சி மாவட்ட கையுந்துபந்து கழகம் செயலாளர் கோவிந்தராஜன் செய்து வருகிறார்.