திருச்சி தெற்கு மாவட்டம், கிழக்கு மாநகரம், பொன்மலை பகுதி தி.மு.க சார் பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி சுப்பிரமணிய புரம் ( மார்க்கெட்) மெயின் ரோட்டில் தி.மு.க.பொதுக் கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பகுதி செயலாளரும்,திருச்சி பொன்மலை பகுதி கழகச் செயலாளர் தர்மராஜ் தலைமையில் நடைபெற்றது . கூட்டத்தில் அமைச்சர் ,அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தலைமைக் கழக பேச்சாளர் நெல்லிக்குப்பம் புகழேந்தி, திருச்சி கிழக்கு மாநகர செயலாளரும், திருச்சி மாநகராட்சி மண்டல குழு தலைவருமான மதிவாணன் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர் தலைமை செயற்குழு உறுப்பினர் கே.என்.சேகரன் மாவட்ட துனைச் செயலாளர் செங்குட்டுவன் லிலாவேலு பகுதி கழகச் செயலாளர்கள் நீலமேகம் மோகன் டி பி எஸ் எஸ் ராஜு முகமத் மணிவேல் ஆர் சி பாபு சிவா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்ட முடிவில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது முடிவில் வட்டச்செயலா ளர்கள் நாகவேணிமாரி முத்து, மனோகர், ஜமால் முகமது ஆகியோர் நன்றி கூறினார்கள்
கூட்டததில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,
மக்களுக்காக போராடி சிறை சென்றவர்கள் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி மற்றும் தற்போதைய முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மக்களுக்காக உழைக்க,மக்களின் கட்டளையை செயல்படுத்த நாங்கள் காத்திருக்கிறோம்.மிக விரைவில் இந்தியாவை பாசிச சக்தியிலிருந்து மீட்டெடுப்பதற்கு உறுதியளிக்கும் கூட்டமாக எப்படி தேசிய கட்சி தலைவர்கள் பங்கேற்ற பிறந்தநாள் கூட்டம் அமைந்ததோ, அதேபோல் இக்கூட்டம் இருக்க வேண்டும் என்பதை மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.இன்றைக்கு மட்டுமல்ல, என்றைக்கும் சட்டமன்றம் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடையது , நாடாளுமன்றமும் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடையது என உறுதி ஏற்கும் இந்த நாள் அமையட்டும் என்றார்