ஆக்ராவில் கடந்த 18 மற்றும் 19 ஆம் தேதி நடைபெற்ற தேசிய அளவிலான மியூசிக்கல்சேர் போட்டிகளில் தமிழ்நாடு, குஜராத், பஞ்சாப், ஹரியானா, மத்திய பிரதேஷ் மகாராஷ்டிரா, மகாராஷ்டிரா உட்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 300க்கு மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டனர். போட்டிகள் 8, 11, 14 வயதுக்கு உட்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் மியூசிக்கல் ஸ்கேட்டிங் சேர், ஸ்பீடு, ப்ரீ ஸ்டைல், வித்தவுட் மியூசிக்கல் ஸ்கேட்டிங் ஆகிய அடிப்படையில் போட்டிகள் நடைபெற்றது.
நடைபெற்ற போட்டிகளில் தமிழக அணியினர் 19தங்கம்,12 வெள்ளி 13 வெண்கலம் உட்பட 44 பதக்கங்கள் பெற்று இந்திய அளவில் இரண்டாவது இடத்தை பெற்றனர். இதில் திருச்சியிலிருந்து சென்ற வீராங்கனைகள் எலைசா கிறிஸ்டின், கேரில், சர்தார்சுக்வீர், பாரதிசுக்வீர் ஆகியோர் தங்கப்பதக்கம் உட்பட பதினாறு பதக்கங்களை பெற்றுள்ளனர்.
வெற்றி பெற்று இன்று ரயில் மூலம் திருச்சிக்கு வந்த வீரர் வீராங்கனைகளை தமிழ்நாடு மியூசிக்கல் ஸ்கேட்டிங் சங்க தலைவரும் பயிற்சியாளருமான கந்தமூர்த்தி மற்றும் பெற்றோர்கள் அவர்களை பொன்னாடை போர்த்தி உற்சாகமாக இனிப்புகள் வழங்கி வரவேற்றனர்.