திருச்சி மாவட்டம் நம்பர் 1 டோல்கேட் அடுத்து தாளக்குடி தெற்கு தெருவில் வசிப்பவர் மாரியாயி, இவருக்கு கோபி வயது 29, முத்தையா வயது 31 என இரு மகன்கள் உள்ளனர். கோபி கூலி வேலை செய்து வருகிறார். முத்தையா மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால் திடீரென அவரது தாய் மட்டும் அல்லாது அப்பகுதியில் வசிக்கும் குடியிருப்பு வாசிகளை திடீரென அடிப்பதாக கூறப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கூட முத்தையா அவரது தாய் மரியாயை அடித்துள்ளார். இதனால் இவரது தம்பி கோபி வீட்டில் தூங்காமல் மாடியில் தான் தூங்கி வந்துள்ளார்.
இந்த நிலையில் கோபி வழக்கம்போல் வீட்டின் மாடியில் தூங்கிக் கொண்டிருந்தபோது இன்று காலை 7 மணி அளவில் முத்தையா இரும்பு கம்பியால் கோபியை தலையில் தாக்கியதால் சம்பவ இடத்திலேயே கோபி உயிரிழந்தார்.
தகவல் அறிந்த லால்குடி சராக காவல் துணை கண்காணிப்பாளர் அஜய்தங்கம், சமயபுரம் காவல் ஆய்வாளர் கருணாகரன் சம்பவ இடத்தில் உடலை கைப்பற்றி மனநலம் பாதிக்கப்பட்ட முத்தையாவை கைது செய்தபோது மனநலம் பாதிக்கப்படுவர் என்பதால் அவர் போலீசாருடன் செல்லாமல் நான் கொலை செய்யவில்லை என செல்ல மறுத்ததால் அரை மணி நேரமாக போராடி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். பட்டபகலிலேயே இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.