வருகிற 2023-ம் ஆண்டு ஏப்ரல் 04 அன்றைய தினம் மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் இயங்கும் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்து இயங்கும் மதுக்கூடங்கள் FLA/FL2/FL3/FL3A/FL3AA & FL 11 அனைத்தும் மூடப்படும்.
அதனுடன் இணைந்து இயங்கும் மதுக் கூடங்கள் மற்றும் FL2/FL3/FL3A/FL3AA & FL11 வரையிலான ஹோட்டல் பார்களிலும் மதுபானம் விற்பனை இன்றி மூடப்பட்டிருக்கும். மேலும், அன்றைய தினங்களில் மதுபானங்களை விற்பனை செய்வதையும், வேறு இடங்களுக்கு கொண்டு செல்வதையும் தவிர்க்க வேண்டும், மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.