திருச்சி விமான நிலையத்திலிருந்து பல்வேறு வெளி நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு இயக்கப்படும் விமான நிலையங்களில் ஆசிய பசிபிக் நாடுகளுக்கு இடையேயான 28 விமான நிலையங்களில் திருச்சி விமான நிலையம் தலை சிறந்த விமான நிலையமாக தேர்வு செய்யப்பட்டது.
இந்நிலையில் இதற்கான விருது வழங்கும் விழா நேற்று புதுடில்லியில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறந்த விமான நிலையமாக தேர்வு பெற்ற திருச்சி விமான நிலையத்திற்கு விமான நிலைய ஆணைய குழுவின் தலைவர் சஞ்சீவ் குமார் விருதினை வழங்கினார். அதனை திருச்சி விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணி பெற்றுக்கொண்டு அனைவருக்கும் நன்றி கூறினார்.