திருச்சி மத்திய மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம், கலைஞர் அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. மாவட்ட அவைத்தலைவர் பேரூர் தர்மலிங்கம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு முன்னிலை வகித்தார்.
இக்கூட்டத்தில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா குறித்தும், புதிய உறுப்பினர்கள் சேர்க்கை குறித்தும், நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து வாக்குச்சாவடி மையங்களுக்கும் பூத் கமிட்டி அமைப்பது குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
இக்கூட்டத்தில் ஶ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி, மாநகராட்சி மேயர் அன்பழகன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.