திருச்சி சிவசக்தி அகடாமி மற்றும் அக்ஷரா கிட்கேர் இணைந்து 11-வது ஆண்டு விழாவை திருச்சி தமிழ் சங்க கட்டிடத்தில் உள்ள கூட்ட அரங்கில் வெகு விமர்சையாக கொண்டாடியது. இந்த ஆண்டு விழாவிற்கு அகடாமி இயக்குனர் மீனா சுரேஷ் தலைமை தாங்கினார்.
விழாவில் சிறப்பு அழைப்பாளராக திருச்சி தென்னூர் ரத்னா குளோபல் ஹாஸ்பிடல் இயக்குனர் டாக்டர் பிரியா பிரவீன் மற்றும் வட்டார கல்வி அலுவலர் மருதநாயகம், மாணிக் ஜுவல் கிராஃப்ட் உரிமையாளர் மாணிக்கம் ஆகியோர் கலந்துகொண்டு ஆண்டு விழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.
முன்னதாக ஆண்டு விழாவில் சிறு குழந்தைகளின் நடனமும் திருக்குறள் ஒப்பித்தல் போட்டிகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளின் பரதநாட்டியம்
பிரேக் டான்ஸ் சோலோ டான்ஸ் நாடகம் மற்றும் தங்கள் தனி திறமைகளை வெளிப்படுத்தினர் இந்த ஆண்டு விழாவை மாணவ மாணவிகள் பெற்றோர் உள்ளிட்ட ஏராளமானோர் கண்டு கழித்தனர்.