பங்குனி உத்திரத்தை முன்னிட்டு திருச்சி ரயில்வே ஜங்ஷன் ரவுண்டான அருகே உள்ள அருள்மிகு ஸ்ரீ வழிவிடு வேல் வள்ளி தெய்வானை முருகன் கோவிலில் இன்று காலை முதல் முருகப்பெருமான் மற்றும் வள்ளி தெய்வானை ஆகிய சாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
மேலும் இன்று காலையில் இருந்து பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து முருகப்பெருமானை தரிசித்து சென்றனர். தொடர்ந்து இன்று மாலை அருள்மிகு ஸ்ரீ வழி விடு வேல்வள்ளி தெய்வானை முருகன் கோவிலில் இருந்து முருகப்பெருமான் அலங்கார தேரில் எழுந்தருளி வீதி உலா செல்கிறார்.
இந்த வீதி உலாவானது கோவிலில் இருந்து புறப்பட்டு ஜங்ஷன் ராகின்ஸ் ரோடு முனீஸ்வரன் கோவில் சேவா சங்கம் ஒத்தக்கடை பறவைகள் சாலை வழியாக சன்னதி வந்து அடைகிறார்
முன்னதாக இன்று காலை பங்குனி உத்திரத்தை முன்னிட்டு கோவில் முன்பு ஆர் கே மெட்டல் குரூப் சார்பில் உரிமையாளர் அர்ஜுனன் ரவிக்குமார் குடும்பத்தார் மற்றும் நிறுவனத்தின் ஊழியர்கள் சார்பில்
3000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.