ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் அருகே உள்ள நெல்சன் ரோடு காட்டழகிய சிங்கபெருமாள் கோயில் அருகில் உள்ள 2.57 ஏக்கர் பரப்பளவில் ரூ 2.50 கோடி திட்ட மதிப்பீட்டில் புதிய கோசாலை , மருந்தகம் மற்றும் தீவனம் வைக்கும் அறை கட்டும் பணியினை சென்னையில் இருந்து காணொளிக் காட்சி வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார் ,
பணி நடைபெற உள்ள இடத்தில் பூமி பூஜை நடைபெற்றது இதில் கோயில் இணை ஆணையர் மாரிமுத்து , உதவி செயற்பொறியாளர் அசோகன், இளநிலை பொறியாளர் நந்தகுமார் , திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஸ்ரீரங்கம் கோட்ட தலைவர் ஆண்டாள் இராம்குமார் , ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் அவர்களின் நேர்முக உதவியாளர் ரவிச்சந்திரன், அர்ச்சகர் சுந்தர் பட்டர் மற்றும் கோயில் பணியாளர்கள் கலந்து கொண்டனர் .*