திருச்சி மெயின் கார்ட் கேட்டு அருகே உள்ள மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி இலக்கிய அணி சார்பில் மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கட்டத்தில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி வலுபெற செய்ய என்ன செய்ய வேண்டும். இலக்கிய அணியை விரிவுபடுத்த எடுத்து வரும் நடவடிக்கைகளை குறித்து விரிவாக விதாதிக்கபட்டது.
இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய மாநில இலக்கிய அணி தலைவர் புத்தன் கூறியது..
இந்தியாவில் பாஜக அரசு மக்களுக்கு விரோதமாக நடந்து வருகிறது. குறிப்பாக பாஜக மோடி அரசு , தலைவர் ராகுல் காந்தி மீது பொய் வழக்கு போட்டு அவரை சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த செயல் முற்றிலும் ஒரு ஜனநாயக படுகொலை என தெரிவித்தார். மோடி அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு உறுதுணையாக இருந்து கொண்டு பல்வேறு தவறுகளை செய்து வருகிறார்கள். அதை சுட்டி காண்பித்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கையை மோடி அரசு எடுத்து வருகிறது. இதனை வன்மையாக கண்டிக்கிறோம் என்றார்.
வரும் 2024 ஆம் ஆண்டு தேர்தலை சந்தித்து காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் எனவும் தெரிவித்தார். குறிப்பாக ராகுல் காந்தி மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை கண்டித்து 25000 ஸ்டாம்ப் போஸ்டர் அனுப்பும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக கூறினார்.