திருச்சி அரிஸ்டோ மேம்பாலம் பணிகள் 95 சதவீதம் முழுமையாக முடிந்ததை போட்டி அடுத்த வாரம் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என ஏற்கனவே தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு தெரிவித்து இருந்தார். இந்நிலையில் இன்று திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் நடைபெற்று வரும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் சரவணன் கவுன்சிலர்கள் கோவிந்தராஜன், ரெக்ஸ் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய திருநாவுக்கரசர்:-
தமிழக அரசு இரண்டு முறை சட்டப்பேரவையில் நிறைவேற்றிய ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவிற்கு தமிழக ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்துள்ளது இதை போன்று தொடர்ந்து மற்ற மசோதாவுக்கும் ஆளுநர் அவர்கள் கையெழுத்திட்டு சட்டமாக்க வேண்டும். ஆளுநர் என்பவர் மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையே பாலமாக இருக்க வேண்டும், தடுப்பு சுவராக இருக்கக் கூடாது