ஐபிஎல் 2023 கிரிக்கெட் போட்டி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் திருச்சி தேசிய கல்லூரியில் மிகப்பெரிய பிரம்மாண்டமான பேன் பார்க் (fan park) அமைக்கப்பட உள்ளது. இது குறித்து திருச்சியில் உள்ள தனியார் ஓட்டலில் செய்தியாளர்களை சந்தித்த பிசிசிஐ கிரிக்கெட் ஆபரேஷன் மேனேஜர் ஸமித் மல்பூர்கர் வரும் 15 மற்றும் 16ஆம் தேதி களில் தேசிய கல்லூரியில் ஐபிஎல் போட்டியை கண்டு களிக்கலாம் என தெரிவித்தார். மேலும் இதற்காக அனுமதி இலவசம் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் விசில்கள், ஆரவாரம், முகத்தில் பெயிண்டிங், உற்சாக கூச்சல்கள், அதிக ஆரவாரத்துடன் ரசிகர்கள் ஐபிஎல் ஐ பார்க்க வருவார்கள். அந்த வகையில் இது போன்ற மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் செயல்களை செய்து தங்கள் அன்பை வெறித்தனமான வெளிப்படுத்தும் ரசிகர்களுக்கு ஐபிஎல் இறுதிப்போட்டியை காண இலவச டிக்கெட் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதனை மேலும் உற்சாகமாக்கிட இசை, உணவுப் பொருட்கள், குளிர் பானங்கள் இவை அனைத்தையும் அனுபவித்துக்கொண்டே ஐபிஎல் 2023-ஐ மகிழ்ச்சியுடன் கண்டு களிக்கலாம் எனவும் ஸ்மித் மலபூர்கர் தெரிவித்துள்ளார். எனவே இது கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய வாய்ப்பாக இருக்கும். பிரம்மாண்டமான ஃபேன் பார்க்கில் ரசிகர்கள் தங்களது மகிழ்ச்சியை ஆரவாரத்துடன் கொண்டாடலாம் என்பதில் சந்தேகம் இல்லை.