திருச்சி சின்னிடைவீதியில் உள்ள தங்கமயில் ஜுவல்லரியில் தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டும் முதலாம் ஆண்டு நிறைவு பெற்று இரண்டாம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு வாடிக்கையாளர்களை கெளரவிக்கும் வகையில் அவர்களுக்கு சிறப்பு பரிசுகள் மற்றும் பழ வகையிலான மரகன்றுகள் வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது .
இந்நிகழ்வு தங்கமயில் ஜுவல்லரியின் முதன்மை செயல் அதிகாரி விஷ்வா நாராயண் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக பெண்கள் தனிசிறைதுறை கண்காணிப்பாளர் ருக்குமணி பிரியதர்ஷினி மகாத்மா கண் மருத்துவமனை இயக்குனர் மருத்துவர் மீனா ரமேஷ் திருச்சி பயனீட்டாளர் இயக்கத்தின் தலைவர் சகுந்தலா சீனிவாசன் சமுதிரிகா அகடமியின் நிர்வாக இயக்குனர் Rtn. தமிழச்சி பிரியா கோவிந்தராஜ்
ரோட்டரி கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி சக்தி அமைப்பின் தலைவி பியாட்ரிஸ் வனஜா செயலாளர் சசிகலா செல்வராஜ் திருச்சி மாவட்ட ரோட்டரி 2025-26 ன் கவர்னர் கார்த்திக் Rtn. Dr. சீனிவாசன் இயக்குனர் நன்மதிப்பு ரோட்டரி மாவட்டம் 3000 அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் மாற்றம் அமைப்பின் நிர்வாகியும் நடிகருமான ஆர். ஏ. தாமஸ் அமைப்பின் பெண்கள் பிரிவு செயலாளர் வழக்கறிஞர் கார்த்திகா உள்ளிட்டோர் கலந்து கொண்டு குத்துவிளக்கை ஏற்றி வைத்து வாடிக்கையாளர்களுக்கு பரிசுகளையும் மரகன்றுகளையும் வழங்கினர்.
இந்நிகழ்வில் திருச்சி தங்கமயில் ஜுவல்லரியின் கிளை மேலாளர் பழனிகுமார் உதவி மேலாளர் கணேசன் உதவி மேலாளர் பாலசந்தரின் மற்றும் திரளான வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்.