திருச்சி 23-வது வார்டுக்கு உட்பட்ட தில்லை நகர் காந்திபுரம் பகுதியில் 2021 2022 ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட ரூபாய் 30 லட்சம் மதிப்பீட்டில் ஆன நவீன பொதுக் கழிப்பிட வளாகத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு திறந்து வைத்தார்.
அதேபோல் திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட , பாரதிநகர், உய்யகொண்டான் திருமலை கொடாப்பு கூளையன் தெரு, குறத்தெரு ஆகிய 3 இடங்களில் திருச்சிராப்பள்ளி மேற்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூபாய்.1.28கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நவீன பொதுக்கழிப்பிடங்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப்குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், மாமன்ற உறுப்பினர் சுரேஷ், மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.