துபாய் நாட்டில் டேரா என்ற இடத்தில் தங்கி பணிபுரிந்து வந்த கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் ராமராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த இமாம் காசீம், மற்றும் குடு (எ) முகமது ரபிக் ஆகியோர் தங்கியிருந்த குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவரும் பரிதாபமாக உயிரிழந்ததையடுத்து,
இருவரது உடல்களும் சர்வதேச திருச்சி விமான நிலையத்திற்கு இன்று கொண்டு வரப்பட்டது. அதனைத் தொடர்ந்து திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப்குமார் இருவரின் பூத உடல்களுக்கும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.