ஏப்ரல் 19-ம் தேதி உலக கல்லீரல் தினமாக அனுசரிக்கப்படுகிறது. அதனை தொடர்ந்து திருச்சி அப்போலோ மருத்துவமனை சார்பில் கல்லீரல் ஆரோக்கியத்தை காப்பது பற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை வளாகத்தில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது.
இந்த விழிப்புணர்வு பேரணியை அரசு மருத்துவமனை டீன் நேரு கொடி அசைத்து தொடங்கி வைத்தார். காவல்துறை துணை ஆணையர் அன்பு தலைமை தாங்கினார். அப்போலோ மருத்துவமனையின் கல்லீரல் மருத்துவர் டாக்டர் குமரகுருபன் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மருத்துவர் விஜய் கணேசன் வயிறுக்குடல் கல்லீரல் மருத்துவர்கள் முரளி ரங்கன் செந்தூரன் மற்றும் மூத்த குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் சுரேஷ் செல்லையா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த விழிப்புணர்வு பேரணியானது மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை வளாகத்தில் துவங்கி எம்ஜிஆர் சிலை ரவுண்டானா வழியாக சென்று கோர்ட், கண்டோன்மெண்ட் காவல் நிலையம் வழியாக மீண்டும் திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சென்றடைந்தது இந்த பேரணியில் 300க்கும் மேற்பட்ட மருத்துவ பயிற்சி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு கல்லீரல் பாதிப்பு குறித்த விழிப்புணர் பதிவுகளை ஏந்தி பேரணியாக சென்றனர்.