இந்தியா முழுவதும் ஸ்ரீ சைதன்யா பள்ளிகள் 600 இடங்களில் செயல்பட்டு வருகிறது. அதன் ஒரு கிளையான திருச்சி சொந்தண்ணீர்புரம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சைதன்யா பள்ளியில் ஐஎன் டிஎஸ்ஒ தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழா நடைபெற்றது.
இப்பள்ளியில் இருந்து 600 மாணவ மாணவிகளின் முதல் கட்ட போட்டியில் பங்கேற்றனர். அதில் 317 மாணவ மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு, இரண்டாம் கட்ட போட்டியில் பங்கேற்றனர்.அதில் 219 மாணவ மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
இப்போட்டிகளில் வெற்றி பெற்ற 219 மாணவர்களுக்கும் பாராட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தேசிய கல்லூரியின் பேராசிரியர் முனைவர் சுந்தர் ராமன் கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் ஸ்ரீ சைதன்யா பள்ளியின் பிராந்திய பொறுப்பாளர் சந்திரசேகரன், திருச்சி பள்ளியின் முதல்வர் சோபியா ராமலிங்கம் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.