தமிழக சட்டப்பேரவையில் 8 மணி நேரமாக உள்ள வேலையை12 மணி நேரமாக உயர்த்தும் மாசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது – இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏ.ஐ.டி.யூ.சி தொழிற்சங்கம் சார்பில் திருச்சி மார்க்கெட் அருகில் உள்ள ராமகிருஷ்ணா பாலம் அருகில் சுமார் 30க்கும் அதிகமானோர் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஏ ஐ டி யு சி மாவட்ட செயலாளர் அன்சார்தீன் தலைமை தாங்கினார். ஏ ஐ டி யு சி மாவட்ட பொதுச் செயலாளர் கவுன்சிலர் சுரேஷ் கண்டன உரையாற்றினார். இதில் திருச்சி மாவட்ட ஏ ஐ டி யு சி நிர்வாகிகள் சையது அபுதாஹிர் சுரேஷ் முத்துசாமி சண்முகம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
12 மணி நேர வேலை என்பது தொழிலாளர்களுக்கு எந்த வகையிலும் ஒத்துப் போகாது என்றும் இது தொழிலாளர் நல சட்டத்திற்கு எதிரானது என்பதால் தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
தமிழகத்தில் 8 மணி நேர போராட்டத்திற்காக தான் மே1ம் தேதி மே தினம் கடைப் பிடிக்கப்பட்ட வருகிறது என்றும் – தற்போது தொழிலாளர்களின் நலனை பாதிக்கும் வகையில் 12 மணி நேரமாக வேலையை உயர்த்துவது என்பது கண்டிக்கதக்கது என்றும் முழக்கமிட்டனர்.