12(3) ஒப்பந்தத்திற்கு எதிராக ஒ.டி சம்பளம் வழங்குவது,ஒ.டி. பார்க்க கட்டாயபடுத்துவது, ஒ.டி. பார்த்தால்தான் விடுப்பு என்று நிர்பந்தபடுத்துவது,நியாயமான காரணங்களை ஏற்றுக் கொள்ளாமல் விடுப்பு மறுத்து ஆப்சென்ட் போட்டு தண்டனை வழங்குவது,சிறு குற்றங்களுக்கு கூட அதீத தண்டனை வழங்குவது,சங்க பாகுபாடு பார்த்து செயல்படும் கழக நிர்வாகத்தை கண்டித்தும்,தேவையான தரமான உதிரி பாகங்களை வழங்க வேண்டும், போக்குவரத்து கழகங்களில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்,
ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளர்களை நியமிக்கும் முடிவை கைவிட வேண்டும்,8 மணி நேர வேலை உரிமையை பறிக்கும் தொழிற்சாலை சட்டத் திருத்தத்தை கைவிட வேண்டும்,அனைத்து கிளை உணவகங்களிலும் தரமான உணவு மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும், பொது மக்களின் புகார் மீது உரிய விசாரனை நடத்தாமல் தொழிலாளி மீது குற்றச்சாட்டு சுமத்துவதை கைவிட வலியுறுத்தியும்தமிழ்நாடுஅரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் சங்கத்தினர் (சிஐடியூ ) செவ்வாய் அன்று அரசு போக்குவரத்து கழக திருச்சி மண்டல தலைமை அலுவலகம் முன் குடும்பத்துடன் தொடர் முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்திற்கு சங்கத் தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி சம்மேளன துணைத் தலைவர் கண்ணன், சிஐடியு மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன், சங்க பொதுச்செயலாளர் கருணாநிதி, துணைத் தலைவர் சண்முகம், ஓய்வு பெற்றோர் நல அமைப்பு மாநில துணைத்தலைவர் எம். சண்முகம் ஆகியோர் பேசினர். முடிவில் சங்க பொருளாளர் சிங்கராயர் நன்றி கூறினார்