பிளாரன்ஸ் நைட்டிங்கேல். செவிலியரான இவர் ‘கைவிளக்கு ஏந்திய தேவதை’ (தி லேடி வித் தி லாம்ப்) என்று அழைக்கப்படுகிறார். செவிலியர் சமூக சீர்திருத்தவாதி மற்றும் நவீன செவிலியர்களின் அமைப்பின் நிறுவனராகவும் திகழ்ந்தார். ‘கிரிமியன்’ போரின் போது ஒரு செவிலியராக அவரது பணியை தொடங்கினார். அவர் செயின்ட் தாமஸ் மருத்துவமனை மற்றும் செவிலியர்களுக்கான நைட்டிங்கேல் பயிற்சிப் பள்ளியை 1860-ம் ஆண்டு நிறுவி ஆயிரக்கணக்கானோரை செவிலியராக்கினார்.
மேலும் ப்ளோரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த நாளான மே 12ஆம் தேதி உலகம் முழுவதும் உலக செவிலியர் நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இன்று திருச்சி அரசு மருத்துவமனையில் மருத்துவமனை டீன் நேரு தலைமையில் உலக செவிலியர் தின விழா கேக் வெட்டிக் கொண்டாட்டம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கு மேற்பட்ட செவிலியர்கள் கலந்துகொண்டு மெழுகுவர்த்தியை ஏற்றி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிறப்பாக பணியாற்றிய செவிலியர்கள் மற்றும் பயிற்சி செவிலிய மாணவிகளுக்கு நினைவு பரிசுகள் வழங்கி கௌரவித்தனர்.இந்நிகழ்வில் திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் அருண் ராஜ் , மருத்துவமனை தலைமை செவிலியர் ஜெயபாரதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.