திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசின் ஈராண்டு சாதனை மலர் வெளியீட்டு விழா – புதிய திட்ட பணிகள் அடிக்கல் நாட்டு விழா மற்றும் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றிய மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் : பட்டா என்பது மிக முக்கியமான ஒன்று -நிலம் கையில் இருக்கும் போது மக்களது வாழ்வாதாரம் மேம்படும் என்பதை கருத்தில் கொண்டு திருச்சியில் 24,467 வீட்டு மனை பட்டாக்கள் – தமிழகத்தில் அதிகம் பட்டா வழங்குவதில் மூன்றாவது இடத்தில் உள்ளது. மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் 2.41 லட்சம் பேருக்கு மருத்துவ பெட்டகம் வீடு வீடாக சென்று வழங்கப்பட்டுள்ளது.3.94 கோடி மதிப்பீடில் அரசு பள்ளியில் படித்து மேற்படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு 1000 ரூபாய் வழங்கி வருகிறோம்.78 கோடி ரூபாய் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் தள்ளுபடி செய்துள்ளோம் திருச்சி மாவட்டத்தில்.பஞ்சப்பூர் மற்றும் மாநகரில் பாதாள சாக்கடை பணிகள் மாவட்டத்திற்கு மிக முக்கியமானது – ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் திருச்சி மாவட்டம் முதல் இடத்தில் உள்ளது.
இதில் சிறப்புரை ஆற்றிய தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என் நேரு : நம்பர் 1 மாவட்டமாக திருச்சி அமைய எங்களுடைய பங்கு மட்டும் அல்ல – அதிகாரிகளான உங்கள் ஒவ்வொருவருக்கும் உண்டு. நாங்கள் திட்டம் தீட்டுவது பெரிதல்ல – அதனை செயல்படுத்துவது அதிகாரிகளான நீங்கள் தான். மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு துறை அதிகாரிகள் எடுக்கும் முயற்சி,முடிவு தான் நாட்டு மக்களுக்கு நல்லாதாக அமைகிறது.திருச்சி மற்றும் சேலத்தை எனக்கு தந்து இருக்கிறார்கள் – மிக சிறப்பாக இந்த மாவட்டத்தை நான் உருவாக்கி தருவேன் என உறுதி கூறுகிறேன்.ஓராண்டு காலத்தில் மிக பெரிய அரங்கம் ஒன்றை இந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்படுத்த உள்ளோம்..10 ஆண்டு காலம் வேறு ஆட்சி இருந்தது – ஆனால் தற்போது முதல்வரின் செயல்பாடை பாருங்கள் – நேரடியாக அவர் உங்களை சந்திக்கின்றார். நான் உங்களிடம் கேட்பது ஒன்றே ஒன்று மட்டும் தான் உங்களுடைய அன்பும் ஆதரவும் எப்போதும் முதலமைச்சருக்கு இருக்க வேண்டும் என பேசினார்.
தொடர்ந்து 12,634 பயனாளிகளுக்கு 63 கோடியே 36 லட்சம் மதிப்பிலான இலவச வீட்டுமனை பட்டா , இலவச வீடு , தையல் இயந்திரம் , விவசாய உபகரணங்கள் போன்ற நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு வழங்கினர். இந்நிகழ்வில் திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் கார்த்திகேயன், திருச்சி மாவட்ட காவல் ஆணையர் சுஜித் குமார், திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்யபிரியா,திருச்சி சரக டி.ஐ.ஜி சரவன சுந்தர்,திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் மற்றும் சட்ட மன்ற உறுப்பினர்கள் ,மாநகராட்சி மேயர் அன்பழகன் ,மாமன்ற உறுப்பினர்கள் ,உள்ளாட்சி பிரதிநிதிகள் ,துறைச் சார்ந்த அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.