டி.ஆர்.யு.இ ரயில்வே தொழிலாளர்கள் கோரிக்கை திருச்சி ரயில்வே ஜங்ஷன் கோட்டா அலுவலகம் முன்பு கோட்டத் தலைவர் கரிகாலன் தலைமையில் நடைபெற்றது.கண்டன உரையை பொதுச் செயலாளர் ஹரிலால், சிஐடியு மாவட்ட செயலாளர் ரங்கராஜன் மற்றும் டி.ஆர்.இ.யூ நிர்வாகிகள் ராஜா, சரவணன் ஆகியோர் வழங்கினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் இரயில்வே வாரிய விதிகளை மீறி 4, 5 கோச் பார்க்க சொல்லும் வற்புறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், அதிக வருமானம் காட்ட வேண்டும் என்பதற்காக தொழிலாளர்களை Grounding செய்வதும், பணியிட மாற்றம், பணியிடை நீக்கம் என மிரட்டி மன உளச்சல் ஏற்படுத்தும் போக்கை தடுத்து நிறுத்து வேண்டும்,
ஸ்குவாடு நியமனத்தில் பாரபட்சம், CCL விண்ணப்பம் தேக்க நிலை, 200 மேற்பட்ட காலி பணியிடங்களால் தொழிலாளர்கள் பதிக்கப்படுவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷமிட்டனர்.