திருச்சி உறையூர் ஐஸ்வரியா மருத்துவமனை Dr Rajesh Rajendran நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
திருச்சி உறையூர் ஐஸ்வர்யா மருத்துவமனை மற்றும் திருச்சி சிறுநீரக அறுவை சிகிச்சை மன்றம் சிறுநீரக பாதை மீட்டு உருவாக்கு அறுவை பயிலரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் சிறுநீர் பாதையில் ஏற்படும் சிதைவுகளை மற்றும் பிறழ்வு ஆகியவற்றை குணப்படுத்த செய்யப்படும் சிக்கலான அறுவை சிகிச்சைகளை உலகின் மிகச்சிறந்த அறுவை சிகிச்சை நிபுணர்களால் ஐஸ்வர்யா மருத்துவமனை மற்றும் செர்பியாவில் உள்ள மருத்துவர் ரேடோஸ் அவர்களில் மருத்துவ மனையிலிருந்தும் செய்யப்பட்டு அவை திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் நடைபெற்ற மருத்துவ பயிலரங்கத்தில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதன் மூலம் பல ஏழை நோயாளிகள் பலன் அடைந்துள்ளனர்.
இந்த பயிலரங்கத்தில் 165 க்கும் மேற்பட்ட வெவ்வேறு மாநிலங்களில் இருந்து வந்த சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர்கள் கலந்து கொண்டனர் தமிழகத்தில் இதுபோன்று சிறுநீரக நீர்ப்பாதை மீட்டு உருவாக்கு பன்னாட்டு அறுவை பயிலரங்கம் நடைபெறுவது இதுவே முதல் முறையாகும். மேலும், மற்ற பல நாட்டு அறுவை சிகிச்சை நிபுணர்களும் பலன் பெறும் வகையில் இணையம் வாயிலாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. என தெரிவித்தார்.