உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் .லால்வேனா IAS அவர்களின் அவசர தடையாணை உத்தரவின் படி திருச்சி மாவட்ட நியமன அலுவலர் டாக்டா.ரமேஷ்பாபு தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கொண்ட குழுவால் திருச்சி உறையூர் ராஜேஸ் கண்ணா மளிகை, உறையூர் ஸ்ரீ நாகநாதர் டீ ஸ்டால், உறையூர் செந்தில் குமார் மளிகை, சாலை ரோடு குரு பீடா ஸ்டால் மற்றும் சாலை ரோடு ரவி டீ ஸ்டால் ஆகிய கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
முன்னதாக ஐந்து கடைகளிலும் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பான்மசாலா குட்கா போன்ற புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது அறிந்து ரூ.5000/- அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், அவர்கள் தொடர்ந்து விற்பனை செய்வது கண்டறியப்பட்டு மீண்டும் அந்த ஐந்து கடைகளுக்கும் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டு மீண்டும் ரூ.10,000/- அபராதம் விதிக்கப்பட்டது.
இந்நிலையில் சென்னை, உணவு பாதுகாப்பு ஆணையர் லால்வேனா IAS அவர்களின் அவசர தடையாணை உத்தரவு வழங்கியதன் அடிப்படையில் அந்த ஐந்து வணிக கடைகளும் இன்று சீல் வைக்கப்பட்டது. மேலும், மாவட்ட நியமன அலுவலர் டாக்டர்.ரமேஷ்பாபு கூறுகையில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்து தொடர் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் 2006-ன் படி நடவடிக்கை எடுக்கப்பட்டு அந்த கடை சீல் செய்யப்படும் என்று கூறினார். இந்த நிகழ்வில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் உடனிருந்தனர்.