தமிழகத்தில் மாநகராட்சி பள்ளிகளை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது செயல்பட்டு வரும் மாநகராட்சி பள்ளிகளை தனியார் பள்ளிகளுக்கு இணையாக அனைத்து கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்துவதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் திருச்சி எடமலைப்பட்டி புதூரில் மாநகராட்சி சார்பில் அனைத்து வசதிகளுடன் கூடிய மாநகராட்சி மாதிரி உயர்நிலைப் பள்ளிக்கான புதிய கட்டுமான பணிகள் ரூபாய் 990.00லட்சம் மதிப்பீட்டில் இன்று தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கட்டுமான பணிகளை துவக்கி வைத்தார்.இந்நிகழ்வில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன்,மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள், மாமன்ற உறுப்பினர் முத்துச்செல்வம், மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.