திருச்சி மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் ஆட்சி தலைவர் பிரதீப் குமார் முன்னிலையில், தேசிய பேரிடர் மீட்பு குழுவினரின் 30 பேர், பேரிடர் கால மீட்பு பணி குறித்த மாதிரி ஒத்திகை பயிற்சியில் ஈடுபட்டனர். இதில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறையை சேர்ந்த 30 வீரர்களும் பங்கேற்பு.உத்தரவு அதிகாரி சங்கர் பாண்டியன், பயிற்சி அதிகாரி மணிகண்டன் தலைமையில் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் விபத்து ஏற்பட்ட இடத்தில் தடுப்புகளை அமைத்து பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்துதல். அவசர கால மீட்பு ஊர்தியை பயன்படுத்தி, கட்டிட இடுபாடுகளை அகற்றி அதில் சிக்கியிருப்பவர்களை மீட்பது, அங்குள்ள கான்கிரீட் கட்டிடங்களை இடிப்பதற்கான கருவி, கான்கிரீட் கம்பிகளை துண்டிப்பதற்கும், அதனை அகற்றுவதற்கும் நவீன ஹைட்ராலிக் கருவிகளை பயன்பத்துவது, உடைந்த கான்கிரீட் துண்டுகளை உயரத்தில் தூக்கி அதில் சிக்கியிருப்பவர்களை கருவிகள் உதவியுடன் மீட்பது,
தீயின் புகை மற்றும் கான்கிரீட் துகள்களின் புகைகளை கருவிகளின் உதவியுடன் அகற்றுவது, தீயணைப்பு கருவி, வெள்ள அபாய காலத்தில் சிக்கி உள்ளவர்களை மீட்பதற்கான பைபர் படகு, அதற்கு தேவையான உயிர் காக்கும் கவசங்கள், மீட்கப்பட்டவர்களை காப்பாற்றுவதற்கான முதலுதவி சிகிச்சைகள், இடிபாடுகளில் சிக்கி இருப்பவர்களை கண்டறிவதற்கான நவீன கேமராக்கள்,
அடுக்குமாடி குடியிருப்புகளில் சிக்கித் தவிப்பவர்களை கயிறு மூலமாகவும், துணி விரிப்பு மூலமாகவும் மீட்பது, பேரிடர் காலங்களில் தகவல் தொழில் நுட்பம் முழுமையாக தடைபட்டிருந்தாலும் அதனை சமாளிக்கும் விதத்தில் சேட்டிலைட் உதவியுடன் செயல்படும் தொலைத்தொடர்பு வாகனம், அதில் இணையதள வசதியுடன் வீடியோ கான்பரன்சிங், ரேடியோ கான்பிரன்சிங் ஆகியவற்றின் உதவியுடன், மீட்பு குழுக்களை ஒருங்கிணைப்பது, அதிநவீன கேமராக்கள் கொண்ட வாகனம், அதிலிருந்து விபத்து நடந்த இடத்தில் நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடன் பதிவு செய்து, அதனை மத்திய பாதுகாப்பு அமைச்சக தலைமையகத்திற்கு அனுப்பி வைப்பது போன்றவை பயற்சியின் போது நிகழ்த்திக்காட்டப்பட்து.