திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் இன்று கடந்த 2022-2023 நிதிஆண்டில் காணாமல் போன 169 செல்போன்களும், 2023-2024 நடப்பாண்டில் 72 செல்போன்களும் மீட்கப்பட்டுள்ளது. இது குறித்து பொதுமக்களிடம் பேசிய காவல்துறை ஆணையர் சத்தியபிரியா கூறுகையில் திருச்சி மாநகரத்தில் பொதுமக்கள் தவறவிட்ட காணாமல் போன திருடப்பட்ட 201 செல்போன்கள் அதன் ஐஎம்இஐ நம்பரை கொண்டு காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர் எனவே, இந்த செல்போன்களை இன்று உரிய நபர்களிடம் ஒப்படைப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
பொதுமக்களாகிய நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் உடமைகளை பாதுகாப்பதில் கவனம் செலுத்த வேண்டும். உங்களுடைய செல்போன்களை மேல் பாக்கெட்டில் வைப்பதை தவிர்க்க வேண்டும் வாகனம் ஓட்டும்போது செல்போன் பேசுவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும் திருச்சி மாநகர காவல் துறை தொடர்ந்து குற்றங்களை குறைப்பதற்கான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது அதற்கு பொது மக்களாகிய நீங்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து செல்போன்களை தவறவிட்ட உரிமையாளர்களிடம் திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்திய பிரியா ஒப்படைத்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்திய பிரியா கூறுகையில் :-
செல்போன்கள் தொடர்பாக 500வழக்குகள் நிலுவையில் உள்ளது. போக்குவரத்து நெரிசல் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்யப்படுகிறது. போலி மதுபானங்கள் விற்பனை தொடர்பாக தொடர்ந்து நடவடிக்கை எடுக்கபட்டு வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு வருகிறது.என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் சத்தியபிரியா துணை ஆணையர்கள் அன்பு மற்றும் சுரேஷ்குமார் உதவி ஆணையர்கள் ஆய்வாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.