திருச்சி மே 27 -திருச்சி அரசு மாவட்ட தலைமை சித்த மருத்துவமனை சார்பில் இன்றும், நாளையும் இலவச சிறப்பு டெங்கு காய்ச்சல் தடுப்பு சித்த மருத்துவ முகாம் மற்றும் மூலிகை கண்காட்சி இன்று தொடங்கியது. இந்த கண்காட்சியை திருச்சி மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் காமராஜ் தொடங்கி வைத்தார். இந்த முகாமில் இதய நோய்,ஆஸ்துமா, மூட்டு வலிகள், சத்து குறைபாடு, கண் நோய், மலக்கட்டு, தூக்கமின்மை, வயிற்று புண்கள், சர்க்கரை நோய் உள்ளிட்ட பலவித நோய்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மேலும் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல், மார்பக கட்டி, கருப்பைக் கட்டி போன்றவற்றிற்கு ஆலோசனை வழங்கப்படுகிறது.இந்த முகாமில் கலந்து கொண்ட பொதுமக்கள் அனைவருக்கும் இலவசமாக மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது. மேலும் மருத்துவமனை வளாகத்தில் மூலிகை கண்காட்சி நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மூலிகைகள் பொடிகளாக பாக்கெட்டுகளில் போடப்பட்டு அந்தந்த நோய்களுக்கு மருந்தாக வழங்கப்பட்டது.மருத்துவ முகாமில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர்.இந்த முகம் நாளையும் நடைபெறுகிறது.