திருச்சி அண்ணாமலை நகரில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்ற இந்த மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 1ஆம் தேதி முதல் டெல்லியில் சென்று போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்யா கண்ணு கூறுகையில். ..
பிரதமர் மோடி ஐயா அவர்கள் விவசாயிகளுக்கு இரண்டு மடங்கு லாபம் தரும் விலையை தருகிறேன் எனக் கூறிவிட்டு தற்பொழுது தர மறுக்கிறார்கள். ஒரு கிலோ நெல்லுக்கு 54 ரூபாய் தருவதாக கூறிவிட்டு 20 ரூபாய் தருகிறார்கள், அதே போல் ஒரு டன் கரும்பிற்கு 8,100 தருவதாக கூறிவிட்டு 2900 தருகிறார்கள். கோதாவரி நதியை தமிழகத்திற்கு திருப்பி விடுவதாக அமித்ஷா அவர்கள் கூறினார்கள். விவசாய நிலங்களை அழிக்கும் பன்றிகளை பிடிக்க உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறுகிறார்கள் ஆனால் பன்றிகளை முறையாக பிடிப்பதில்லை. மேலும் விவசாய நிலங்களில் அறுந்து விழுகும் மின் கம்பிகள் மூலமாக கரும்பு உள்ளிட்ட பயிர்கள் எரிந்து நாசமாகிறது இதற்கு நிவாரணம் வழங்க வேண்டும்.
விவசாயம் செய்யக்கூடிய விவசாயிகளை யானைகள் மிதித்து கொள்ளும் சூழ்நிலை உள்ளது.சாராயம் குடித்து உயிரிழந்த நபருக்கு 10 லட்சம் ரூபாய் கொடுக்கும் தமிழக அரசு விவசாயிகளை விலங்குகள் தாக்கும் பொழுது எந்த நிவாரணமும் வழங்க மறுக்கிறது. உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஜூலை ஒன்றாம் தேதி முதல் டெல்லியில் தொடர் போராட்டம் நடத்த இருக்கிறோம் இந்தப் போராட்டத்திற்காக தமிழக உயர் நீதிமன்றத்தில் அனுமதி பெற்று விட்டோம் ஜூலை ஒன்றாம் தேதி டெல்லி செல்லும் நாங்கள் டெல்லி நீதிமன்றத்தில் அனுமதி பெற்று ஜூலை ஒன்றாம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் எனக் கூறினார்.