திருச்சி கோட்டத்தில் மண்டல பல்துறை பயிற்சி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த பயிற்சி பள்ளியில் அனைத்து மாநிலத்தை உள்ளடக்கிய மாணவர்கள் பயிற்சி பெற்று வருகிறார்கள். தென்னக ரயில்வே முழுவதும் இப்பயிற்சி பள்ளியில் திருச்சியில் மட்டுமே இருக்கிறது. அந்த வகையில் PRO ASM, PRO CC இது போன்ற பல Category-ல், ஆண்கள், பெண்கள் இருபாலரும் கடந்த ஒன்றரை மாதமாக பயிற்சி பெற்று வருகிறார்கள். இதில் சென்ற வாரம் முதல் நாள் 5 பேருக்கு அடுத்த நாள் 4 பேருக்கு அம்மை நோய் பரவத் தொடங்கியது. இதனை கண்ட பயிற்சியாளர்கள் SRMU பொதுச் செயலாளரும் , AIRF (ALL INDIA RAILWAY FEDERATION) அகில இந்திய தலைவருமான கன்னையா அவர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து திருச்சி கோட்ட செயலாளரும், எஸ்ஆர்எம்யூ துணை பொதுச் செயலாளர் வீரசேகரன் உடனடியாக PCND, PCOM, PCPO விடம் தொடர்ந்து வலியுறுத்தியதன் காரணமாக பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும், முன்னெச்சரிக்கையாக மற்றவருக்கு பரவாமல் தடுக்க தடுப்பூசி போன்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார். ஆனால் திருச்சி கோட்டத்தில் உள்ள CMS நிர்வாகமும் அதனை சார்ந்த மருத்துவர்களும் கண்டு கொள்ளாமல் விட்ட காரணத்தினால் உடனடியாக இந்த செய்தியை திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகனுக்கு தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து திருச்சி மாநகராட்சி ஆணையர் உடனடியாக எடுக்கபட்ட நடவடிக்கையை தொடர்ந்து சுகாதார பிரிவை சார்ந்த மருத்துவர்கள் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சிகிச்சை அளித்தனர்.
மேலும் CMS நிர்வாகம் அம்மை நோயால் பாதிக்கப்பட்ட மாணவர்களை அவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர். இதனை வன்மையாக கண்டிக்கிறோம். சொந்த ஊருக்கு செல்லும் போது பாதிக்கப்பட்ட மாணவர்களால் மற்றவருக்கு இந்த நோய் பரவக்கூடிய அபாயம் உள்ளது. மேலும் குறிப்பாக அவர்கள் வீட்டில் இருக்கக்கூடிய குடும்பத்தினர் மற்றும் உறவினருக்கும் இந்த நோய் பரவும். ஆகையால் மீதமுள்ள மாணவர்களுக்கு தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். அவர்களுக்கு அம்மை நோய் பரவாமல் இருக்க தடுப்பூசி போட வேண்டும். தொடர்ந்து அவர்களை கண்காணிக்க CMS நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினார்.