திருச்சி மாநகராட்சியில் 6 வயது முதல் 12 வயது வரை பள்ளி செல்லாமல் இடை நின்ற குழந்தைகள் மாற்றுத்திறன் உடைய குழந்தைகள் மற்றும் இடம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளை கண்டறிந்து திரும்பவும் பள்ளியில் சேர்க்க பிற துறைகளில் ஒத்துழைப்புடன் இடைநிற்றல் பிரச்சனையை தீர்ப்பதற்காக மாவட்டம் மற்றும் வட்டார அளவில் மூன்றடுக்கு குழு அமைக்கப்பட்டது.
திருச்சி நகரம் வட்டார அளவிலான மூன்றடுக்கு குழுவின் கூட்டம் திருச்சி மாநகராட்சி 23 வது வார்டு மாநகராட்சி நடுநிலைப்பள்ளி உறையூர் கிழக்கு பள்ளியில் நடைபெற்றது.இதில் வட்டார கல்வி அலுவலர் ஜோசப் அந்தோணி உறையூர் காவல் உதவி ஆய்வாளர் ,வட்டார மருத்துவ அலுவலர் ஜியாவுதீன் மாமன்ற உறுப்பினர் சுரேஷ் வட்டார குழந்தைகள் வளர்ச்சி அலுவலர் காஞ்சனா வட்டார வளமைய மேற்பார்வையாளர் மல்லிகா பெரியநாயகி ஆசிரியர் பயிற்றுநர் வசந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலும் இக்குழுவில் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஐந்தாவது மண்டல உதவிஆனையர் மற்றும் கோட்டத் தலைவர் உள்ளிட்டோரும் உறுப்பினராக உள்ளனர். ஒவ்வொரு மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமைகளில் இக்கூட்டம் நடைபெற்று பள்ளி செல்லா இடை நின்ற குழந்தைகளை கண்டறிந்து அவர்களுக்கு பயிற்சி அளித்து 100% மாணவர் சேர்க்கை அடைவதற்கு முயற்சிகளை எடுக்க உள்ளனர்.