தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்ற திமுக அரசு தேர்தலின் போது பூரண மதுவிலக்கை அமல்படுத்துவோம் என பிரச்சாரங்களில் கூறி வாக்குகளை பற்றி தற்போது உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்பி மற்றும் அமைச்சர்கள் பலரும் மதுவிலக்கை அமல்படுத்துவோம் என கூறவில்லை என தொடர்ந்து கூறி வருகின்றனர். பொய்யான வாக்குறுதிகளை கூறி ஆட்சியில் அமர்ந்த திமுக ஏற்கனவே அறிவித்தபடி தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்பதனை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை சார்பில் பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தி இன்றைய தினம் மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னதாக ஆட்சியர் அலுவலக சாலையில் இருந்து ஆட்சியர் அலுவலக வளாகம் வரையிலும் டாஸ்மாக்கை இழுத்து மூட வலியுறுத்தியும், பூரண மதுவிலக்கு அமல்படுத்த கோரியும் கண்டனம் முழக்கங்கள் எழுப்பியவாறு பேரணியாக வந்த நாம் தமிழர் கட்சியை சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் பின்னர் ஆட்சி வரை சந்தித்து மனு அளித்தனர்.நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த மகளிர் பாசறைனர் ஒன்றிணைந்து திருச்சி மாவட்டத்தில் 15000 பேரிடம் பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி கையெழுத்து பெற்றதாகவும், மதுவால் 12 வயது சிறுமி தற்கொலைக்கு காரணமான திமுக அரசு மதுவை விற்று வருமானம் தேடுவதுடன் மாற்று வருவாய்க்கு எந்த ஏற்பாடுகளையும் செய்யவில்லை என குற்றம் சாட்டினர்.
பெண்கள் வீதியில் இறங்கி போராடுவதே இரண்டு ஆண்டு திமுக அரசின் சாட்சி, இனி மதுவினால் ஏற்படும் உயிரிழப்புக்கு திராவிட அரசு பொறுப்பு ஏற்க வேண்டும். மது விற்பனையில் இலக்கு நிர்ணயம் செய்யும் திமுக அரசு, உடல் உழைப்பையும் மட்டுமல்ல உடல் அழிப்பையும் அரசு ஏற்றுக்கொள்கிறது, மதுவுக்கு எதிராக பெண்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராடுவோம் என வேதனையுடன் தெரிவித்தனர்.