திருச்சி மாவட்டம் பிச்சாண்டார் கோவில் ஊராட்சியில் வாரந்தோறும் செவ்வாய்கிழமை சந்தை நடைபெற்று வந்தது. *சந்தை கழிவுகளை* அகற்றி வந்த ஊராட்சி மன்றம் கடந்த இரண்டு மாதங்களாக உத்தமர்கோவில் பகுதியில் உள்ள சந்தை கழிவுகளை அகற்றாமல் உள்ளது. தலைவர் & ஊராட்சி செயலரிடம் புகாரளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ஒவ்வொரு வாரமும் சந்தை கழிவுகளை அகற்றும் பிரச்சனை உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்த பின்பு தான் குப்பை அள்ளப்படுகிறது. பலமுறை புகார் அளித்தால் தான் நடவடிக்கை எடுக்கும் ஊராட்சி நிர்வாகத்தால் ஆவேசம் அடைந்த அப்பகுதி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் சந்தை கழிவுகளை அள்ளி ஊராட்சி மன்ற வாசலில் சந்தை கழிவுகளை கொட்டி தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டுமென்றும், கடமையை செய்ய தவறும் ஊராட்சி மன்ற தலைவர் & செயலர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.