பாரத பிரதமர் நரேந்திர மோடியின் 9 ஆண்டு கால அரிய சாதனைகளை விளக்கும் வண்ணம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையின் கீழ் முடிவெடுக்கப்பட்டு பாராளுமன்ற தொகுதி வாரியாக அணி பிரிவு வாயிலாக கூட்டங்கள் பொதுக்கூட்டங்கள் நடத்துவதாக தீர்மானிக்கப்பட்டது.
அதன் ஒரு பகுதியாக மாநில சிந்தனையாளர் பிரிவு சார்பாக மாநில தலைவர் ஷெல்வி தாமோதர் தலைமையில் திருச்சி மாநகர் மாவட்ட சிந்தனையாளர் பிரிவு சார்பாக சாதனை விளக்கக் கூட்டம் ஹோட்டல் அஜந்தாவில் இன்று நடைபெற்றது இந்த கூட்டத்தில் அரசியல் விமர்சகர் கோலாகல ஸ்ரீநிவாஸ், பாஜக மாநில பொதுச் செயலாளர் நபார்டு வங்கியின் தனி இயக்குனருமான பேராசிரியர் ராமஸ்ரீ நிவாசன் சிறப்புரையாற்றினார்கள்.
முன்னதாக சிந்தனையாளர் பிரிவு மாநில செயலாளர் ஸ்ரீராம் வரவேற்புரை ஆற்றினார் பாஜக திருச்சி மாவட்ட தலைவர் ராஜசேகர் தலைமை உரையாற்றினார். சாதனை விளக்கு அறிமுக உரையினை மாநில துணைப் பொருளாளர் சிவசுப்பிரமணியன் உரையாற்றினார். இறுதியாக மாவட்ட தலைவர் தினகர் நன்றியுரை ஆற்றினார்.