திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் செய்யப்பட்ட சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை குறித்து டீன் நேரு கூறுகையில்:-
மதுரை ராஜாஜி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூளைச் சாவு அடைந்த 29 வயது ஆணிடமிருந்து ஒரு சிறுநீரகம் கொடையாக பெறப்பட்டது. இந்த சிறுநீரகம் தொடர் ரத்த சுத்திகரிப்பு (Hemodialysis) சிகிச்சைப் பெற்று வந்த 46- வயது ஆண் நோயாளிக்கு பொருத்தப்பட்டு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. இந்த அறுவை சிகிச்சையானது கல்லூரி முதல்வர் நேரு தலைமையில், மருத்துவக் கண்காணிப்பாளர் அருண்ராஜ் மேற்பார்வையில் அமைக்கப்பட்ட மருத்துவக் குழு மூலம் திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டது.
இந்த அறுவை சிகிச்சையில் சிறுநீரக மருத்துவக் குழு கந்தசாமி, பிரகாஷ், மைவிழி செல்வி, சிறுநீரக அறுவை சிகிச்சைக் குழு ஜெயபிரகாஷ் நாராயணன், ரவி, பரணி, சந்தோஷ் குமார், மயக்கவியல் மருத்துவக் குழு சந்திரன், இரத்தநாள் அறுவை சிகிச்சை மருத்துவர் அருண்பிரசாத், செவிலியர் குழு அறுவை அரங்க செவிலியர் ராஜராணி, சாந்தி, வார்டு செவிலியர் சாரல் மேரி, ஞானாம்பாள், சரண்யா மற்றும் உதவியாளர் குழு ஆகியோர் ஈடுபட்டு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது.அறுவை சிகிச்சைக்குப் பின் நோயாளி நலமுடன் உள்ளார் என தெரிவித்தார்.