திருச்சியில் காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டமைப்பின் திருச்சி மாவட்ட குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு வழக்கறிஞர் கென்னடி தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்.
காவல்துறையில் உயர் அதிகாரிகளையும்மருத்துவக் கல்லூரி முதல்வர்களையும் திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து தோழர்களும் சென்று நேரில் சந்திப்பது, சந்தோஷ்குமார் (எதிர்)மதுரை மாவட்ட ஆட்சியர் தீர்ப்பில் வழங்கப்பட்ட தீர்ப்பு நகல்களை அதிகாரிகளிடம் வழங்குவது. ஆய்வுகள் அனைத்தும் தொகுக்கப்பட்டு மேலும் வருகின்ற ஐந்தாம் தேதி தமிழ்நாடு முழுவதும் வரக்கூடிய ஆய்வுகளையும் இணைத்து முதல்வரிடம் வழங்குவது.வருகின்ற 8ஆம் தேதி சமூக செயல்பாட்டாளர் ஸ்டேன் ஸ்வாமி நினைவு நாள் கடைபிடிப்பது என்றும் அன்றைய தினம் கருத்தரங்கம் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
நகல்களை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும் அதிகாரம் உள்ள அனைத்து துறைகளும் மற்றும் மருத்துவத்துறைகளும் வழங்குவது கீழ்க்கண்ட துறைகள் கலெக்டர் கமிஷனர DC//IG/DIG/SP/ DSP/AC/EOW/ED விபச்சார தடுப்பு பிரிவு/CBI/NIBS/விஜிலென்ஸ்/கஸ்டம்ஸ்/டிரக்ஸ்/க்ரைம் பிராஞ்ச்/உணவு பாதுகாப்பு ரயில்வே போலீஸ் ரயில்வே SP கியூ பிராஞ்ச் ஏர்போர்ட் அத்தாரிட்டி இமிகிரேஷன் ஆகிய துறைகளுக்கு நேரடியாக சென்று வழங்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் தோழர்கள் சம்சுதீன் சர்புதீன்/ஷைனி ஏர்போர்ட் பஷீர் ரமணா வழக்கறிஞர் கமருதீன் தொட்டியம் மலர்மன்னன் கலியபெருமாள் ஆனந்த் வழக்கறிஞர் பொற்கோ எம்.ஐஎம்.பஷீர் அருண் மாசிலாமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.