இந்தியாவின் புராதன பொக்கிஷமான யோகாவை, உலகம் முழுவதும் கொண்டு சேர்க்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி உலகம் முழுவதும் வாழும் மக்கள் பழமை வாய்ந்த யோகாசனங்களை செய்து பயன்பெற வேண்டும் என்பதற்காக அதை சர்வதேச தினமாக அறிவிக்க வேண்டும் என்று கடந்த 2014-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி ஐ.நா.சபைக்கு வேண்டுகோள் விடுத்தார்.
அதை ஏற்றுக்கொண்ட ஐ.நா.சபை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 21-ந் தேதி சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்படும் என்று அறிவித்தது. அதன்படி கடந்த 2015-ம் ஆண்டு முதல் ஜூன் மாதம் 21-ந்தேதி சர்வதேச யோகா தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி சர்வதேச உலக யோகா தினத்தை முன்னிட்டு திருச்சி கோட்டம் ரயில்வே பாதுகாப்பு படை சார்பாக திருச்சி கோட்ட முதுநிலை பாதுகாப்பு படை ஆணையர் ராமகிருஷ்ணன் தலைமையில் ரயில்வே பாதுகாப்பு படை உயர் அதிகாரிகள் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை அங்கத்தினர்கள் அனைவரும் கலந்து கொண்டு யோகாசனம் செய்தனர்.