திருச்சி மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி பட்டியல் அணி சார்பில் மத்திய அரசின் 9 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டம் உறையூர் குறத்தெரு பகுதியில் பட்டியல் அணி மாவட்ட தலைவர் யசோதன் தலைமையில் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட பொதுச் செயலாளர் செந்தில்குமார் வரையறை ஆற்றிட மாவட்ட செயலாளர் நாகேந்திரன் வாழ்த்துரை வழங்கினார். பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகரன் தலைமை உரை ஆற்றினார். சிறப்பு அழைப்பாளராக பட்டியல் அணி மாநில தலைவர் தடா பெரியசாமி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
அதில் கடந்த 9 ஆண்டு காலமாக பாரதப் பிரதமர் மோடி அவர்களின் தலைமையில் சிறப்பாக செயல்படும் மத்திய அரசின் சாதனைகளை எடுத்துரைத்துக் கூறினார். கூட்டத்தில் பட்டியல் அணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர் இறுதியாக பட்டியல் அணி மாவட்ட பொருளாளர் காமராஜ் நன்றி உரையாற்றினார்