இந்திய அரசு. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தில் செயல்படும் திருச்சிராப்பள்ளி மாவட்ட நேரு யுவ கேந்திரா சார்பில் சுதந்திர தினவிழா அமுத பெருவிழாவினை முன்னிட்டு மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் இளையோர் சக்தியை மேம்படுத்தவும் மற்றும் வலியுறுத்தும் விதமாகவும் திருச்சியில் வரும் 27.06.2023 அன்று ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் இளையோர் திருவிழா நடைபெறவுள்ளது. அதையொட்டி கீழ்க்கண்ட போட்டிகள் நடைபெற உள்ளது.
போட்டிகள் விபரம் :
01. இளம் கலைஞர் (ஓவியம்)
02. இளம் எழுத்தாளர் (கவிதை)
03. போட்டோகிராபி (புகைப்படம்)
04. பேச்சுப் போட்டி
05. இளையோர் கலை விழா
போட்டிக்கான விதிமுறைகள்:- போட்டிகளில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சார்ந்த 01.04.2022 அன்று 15 முதல் 29 வயதிற்குட்பட்ட இனையோர்கள் மட்டுமே கலந்து கொள்ளலாம். மேற்கண்ட போட்டிகளில் ஒரு நபர் ஒரு போட்டியில் மட்டுமே கலந்து கொள்ள இயலும். போட்டிகளில் வெற்றி பெறும் இளையோர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளும் வழங்கப்படும். மேலும் மாவட்ட அளவில் வெற்றி பெறுபவர்கள் மாநில போட்டிகளுக்கும், மாநில அளவில் வெற்றி பெறுபவர்கள் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பை பெறுவார்கள்.
பங்கேற்க விருப்பமுள்ள திருச்சி மாவட்டத்தை சார்ந்த இளையோர்கள் இத்துடன் கொடுக்கப்பட்டுள்ள விரைவு தகவல் குறியீடு மூலமாக விண்ணப்பித்தினை பூர்த்தி செய்ய வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, அத்துடன் ஆதார் அட்டை நகலை இணைத்து கீழ்க்கண்ட மாவட்ட நேரு யுவ கேந்திரா அலுவலக முகவரிக்கு வருகிற 23.06.2023 வெள்ளி கிழமைக்குள் அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு மாவட்ட இளையோர் அலுவலர். நேரு யுவ கேந்திரா, ரேஸ்கோர்ஸ் ரோடு. காஜாமலை, திருச்சிராப்பள்ளி 620 023, செல் எண் 9486753795, 7736811030. தொலைபேசி: 0431-2421240 மாவட்ட நேரு யுவ கேந்திரா அலுவலகத்தை நேரிலோ தொலைபேசி மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம். மேற்கண்ட தகவலை திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.