திருச்சி மாநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக அலுவலக திறப்பு விழா தலைமை நிலைய செயலாளர் ராஜசேகரன் திறந்து வைத்தார். திருச்சி. ஜூன்.25- திருச்சி மாநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக அலுவலக திறப்பு விழா மாவட்ட அவை தலைவர் சாத்தனூர் ராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது. மாநகர் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் வரவேற்புரை ஆற்றினார்.
தலைமை நிலைய செயலாளரும், திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ராஜசேகரன் அலுவலகத்தை திறந்துவைத்து குத்து விளக்கேற்றி அனைவருக்கும் லட்டு வழங்கினார். விழாவில் மாவட்ட நிர்வாகிகள் முதலியார்சத்திரம் ராமமூர்த்தி, வக்கீல் சரவணன், ஹேமலதா, தனசிங், ராஜா ராமனாதன், ஸ்ரீபிரியை, ஒன்றிய செயலாளர்கள் இளங்கோவன், மற்றும் பகுதி நிர்வாகிகள், வட்ட செயலாளர்கள்,வட்ட நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், பலர் திரளாக கலந்துகொண்டனர்.