ஸ்ரீ ராம ஜெயம் சிலம்பாட்ட பயிற்சி குழுவிற்கு நிரந்தரமான இடமும் மாணவர்கள் பயிற்சி பெறுவதற்கான உபகரணங்களுக்கும் கிடைக்க ஆவணம் செய்யக் கோரி திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமாரிடம் சிலம்ப மாஸ்டர் ராமர் தலைமையில் சிலம்ப வீரர்கள் கோரிக்கை மனு அளித்தனர். அந்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
திருச்சி மாவட்டம் சோம்பரசம்பேட்டை பகுதி பாரதி நகரில் கடந்த 12 வருட காலமாக ஸ்ரீ ராம ஜெயம் சிலம்பாட்ட குழு என்ற பெயரில் சிலம்பம் பயிற்சி இலவச வகுப்பை நடத்திவருகிறேன். இதில் 100 க்கும் மேற்பட்ட ஏழை மாணவ மாணவிகள் இலவச பயிற்சி எடுத்து வருகின்றனர்.யாரிடமும் எந்த பிரதிபலனையும் எதிர்பாராமல் தமிழரின் பாரம்பரிய கலையான சிலம்பம் அழிந்து விடக்கூடாது என்ற நோக்கத்திற்காக மட்டுமே எனக்குத் தெரிந்த கலையை அனைத்து மாணவர்களுக்கும் இலவசமாக கற்றுக் கொடுத்து வருகிறேன். (ஸ்ரீ ராம ஜெயம் சிலாம்பட்ட குழுவிற்கு ) எங்களுக்கு என்று நிரந்தரமான இடம் இல்லை. என்னிடம் பயிலும் மாணவர்கள் கன்னியாகுமரி தூத்துக்குடி என பல மாவட்டங்களுக்கு சென்று வெற்றி பெற்றும் வருகின்றனர். மாணவர்களுக்கு தேவையான உபகரணங்களும் தேவைப்படுகிறது. ஐயா நானும் டிரைவர் வேலை செய்து கொண்டு மாணவர்களுக்கு பயிற்சி வகுப்பு எடுத்து வருகிறேன்.
மாணவர்களும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களிடமும் உபகரணத்திற்காக ஏதும் கேட்பது கிடையாது. ஐயா திருச்சி மாவட்ட ஆட்சியர் ஆகிய நீங்கள் எங்களுடைய ஸ்ரீ ராம ஜெயம் சிலம்பாட்ட பயிற்சி குழுவிற்கு ஒரு நிரந்தரமான இடமும் மாணவர்கள் பயிற்சி பெறுவதற்கான உபகரணங்களுக்கும் கிடைக்க ஆவணம் செய்தீர்கள் என்றால் திறமையான மாணவ மாணவர்கள் பாரம்பரிய கலையான சிலம்பத்தில் திருச்சி முதலிடம் வகிப்பார்கள் என்று உறுதியாக கூறுகிறேன். கலெக்டர் அவர்கள் ஏழை மாணவ மாணவிகளுக்கு உதவும் வகையில் எங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்து தர வேண்டும் என கோரிக்கை மனு அளித்தார்.